தகவல் சுரங்கம் : வறட்சி ஒழிப்பு தினம்
தகவல் சுரங்கம்வறட்சி ஒழிப்பு தினம்பூமியின் நிலப்பகுதியில் பாதி, மேய்ச்சல் நிலமாக உள்ளது. இதை சார்ந்து 200 கோடி பேர் உள்ளனர். 70 சதவீத கால்நடைகளின் உணவு தேவையை பூர்த்தி செய்கிறது. ஒவ்வொரு வினாடிக்கு நான்கு கால்பந்து மைதானம் அளவுக்கு, வளமான நிலப்பகுதி பாதிப்படைகிறது. உலகில் 40 சதவீத நிலங்கள் பசுமையை இழந்து விட்டன. இயற்கை வளங்களை பாதுகாக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் ஜூன் 17ல் உலக பாலைவனமாக்கல், வறட்சியை எதிர்த்து போராடுதல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'மேய்ச்சல் நிலங்கள் : அங்கீகரித்தல், கவனம் செலுத்துதல், மீட்பு' என்பது இந்தாண்டு மையக்கருத்து.