உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம்:முதல் கிராமம்

தகவல் சுரங்கம்:முதல் கிராமம்

வடகிழக்கில் உள்ள ௭ மாநிலங்களில் பரப்பளவில் பெரியது அருணாச்சல பிரதேசம். இந்தியாவில் முதலில் சூரியன் உதிக்கும் பகுதி இம்மாநிலத்தில் அன்ஜாவ் மாவட்டத்தில் உள்ள 'டோங்' கிராமம். இது இந்தியாவின் கிழக்கு முனையில் உள்ளது. கடல்நீர் மட்டத்தில் இருந்து 4070 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு அதிகாலை 3:00 மணிக்கே சூரிய உதயத்தை பார்க்கலாம். இந்த இடத்தில் இந்தியா, சீனா, மியான்மர் எல்லைகள் சந்திக்கின்றன. 2011 சென்சஸ் படி இதன் மக்கள்தொகை 15. இதன் அருகில் லோஹித் ஆறு ஓடுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

KOVAIKARAN
டிச 31, 2025 10:34

அன்ஜாவ் மாவட்டத்தில் உள்ள இந்த டோங் கிராமம் வசிக்கும் 15 பேர்களில் 6 ஆண்கள், 9 பெண்கள் மற்றும் 4 சிறுவர்கள். இது 2011 ஆம் வருட ஜனத்தொகையில் கணக்குப்படி. மொத்தம் நான்கு வீடுகளே உள்ளன. இந்த கிராமமானது ஒரு சிறிய பழங்குடி கிராமம் ஆகும். அங்கு வசிப்பவர்கள், மேயோர் என்னும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்தவர்கள்.


முக்கிய வீடியோ