தகவல் சுரங்கம்:ரிசர்வ் வங்கி வரலாறு
ரிசர்வ் வங்கி வரலாறுஇந்திய ரிசர்வ் வங்கி சட்ட விதி 1935ன் படி, ரிசர்வ் வங்கி1935 ஏப்.1ல் தொடங்கப்பட்டது. 1949 ஜன.1ல் தேசியமயமாக்கப்பட்டது. இதன் தலைமை அலுவலகம் மும்பையில் உள்ளது. டில்லி, கோல்கட்டா, மும்பை, சென்னையில் மண்டல அலுவலகம் உள்ளது. ரூபாய் நோட்டுகளை வெளியிடுவது, தேசிய நிதிக்கொள்கை உருவாக்குதல், வட்டி விகிதத்தை நிர்ணயித்தல் உள்ளிட்டவை இதன் பணி. இதற்கு ஒரு கவர்னர், 4 துணை கவர்னர்கள், 21 மத்திய உறுப்பினர்கள் உள்ளனர். இதுவரை 26 பேர் ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்துள்ளனர். தற்போதைய கவர்னராக சஞ்சய் மல்கோத்ரா பதவி வகிக்கிறார்.