தகவல் சுரங்கம் : தேசிய கைத்தறி தினம்
தகவல் சுரங்கம்தேசிய கைத்தறி தினம்சுதந்திர போராட்ட காலத்தில் 1905 ஆக. 7ல் சுதேசி இயக்கம் தொடங்கப்பட்டது. இது கைத்தறி உள்ளிட்ட உள்நாட்டு பொருள்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வலியுறுத்தியது. இதை நினைவுப்படுத்தும் விதமாக ஆக. 7ல் தேசிய கைத்தறி தினம் கடைபிடிக்கப்படுகிறது. நாட்டின் பல்வேறு கலாசார பாரம்பரியத்தின் அடையாளமாக கைத்தறி திகழ்கிறது. இது கிராமம், சிறு நகரப் பகுதிகளின் வாழ்வாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. நெசவு தொழிலில் 70 சதவீதம் பேர் பெண்கள். இயற்கையை மையமாக கொண்ட இத்துறை உற்பத்தி நடைமுறையில் சுற்றுச்சூழலுக்கு உகந்தது.