தகவல் சுரங்கம்:ரேடியோ, பெண்கள் தினம்
ரேடியோ, பெண்கள் தினம்பிப்.13ல் உலக ரேடியோ தினம் கடைபிடிக்கப்படுகிறது. பிரிட்டனின் மாக்ஸ்வெல், மைக்கேல் பாரடே எதிரொலி அடிப்படையில் மின்காந்த அலையை, ஒலி அலையாக மாற்றும் கருவியை கண்டறிந்தனர். பின் ஜெர்மனியின் ஹென்ரிச் ஹெர்ட்ஸ் மின்காந்த அலையை, டிரான்ஸ்மீட்டராக மாற்றினார். இத்தாலியின் குலீல்மோ மார்க்கோனி வானொலியை கண்டுபிடித்தார். சுதந்திர போராட்ட வீரர், உ.பி.,யின் முதல் பெண் கவர்னராக இருந்தவர் சரோஜினி நாயுடு. சுதந்திரம் பற்றி கவிதை, பாடல் எழுதியுள்ளார். இவரது பிறந்த நாள் (பிப். 13) தேசிய பெண்கள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.