உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம் : அதிக தண்ணீர் ஓடும் ஆறு

தகவல் சுரங்கம் : அதிக தண்ணீர் ஓடும் ஆறு

உலகின் மிக ஆழமான ஆறு என 'காங்கோ ஆறு' அழைக்கப்படுகிறது. இதன் அதிகபட்ச ஆழம் 720 அடி. இதன் நீளம் 4700 கி.மீ. இதற்கு 25 துணை ஆறுகள் உள்ளன. இது 'ஜயர்' ஆறு எனவும் அழைக்கப்படுகிறது. 'நைல்' நதிக்கு அடுத்து ஆப்ரிக்காவின் நீளமான ஆறு இதுதான். அதே போல அமேசான் ஆறுக்கு அடுத்து, உலகில் அதிகளவில் தண்ணீர் ஓடும் ஆறு இதுவே. இந்த ஆற்றின் வழித்தடங்களில் 40 நீர் மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆப்ரிக்காவின் மொத்த நிலப்பரப்பில் 13 சதவிகித பகுதியில் (40 லட்சம் சதுர கி.மீ.,) இந்த ஆறு பாய்கிறது. அட்லாண்டிக் கடலில் கலக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ