தகவல் சுரங்கம்:தங்கம் எங்கு அதிகம்
தங்கம் விலை தொடர்ந்து உயர்கிறது. இது ஆபரணமாக மட்டுமல்லாமல், முதலீடாகவும் இருக்கிறது. உலக தங்க கவுன்சில் தகவலின் (2026 ஜன.,) படி உலகில் தங்கத்தை அதிகம் கையிருப்பு வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் அமெரிக்கா (8133 டன்) உள்ளது. அடுத்த ஐந்து இடங்களில் ஜெர்மனி (3350 டன்), இத்தாலி (2452), பிரான்ஸ் (2437), ரஷ்யா (2329), சீனா (2303) உள்ளன. ஏழாவது இடத்தில் இந்தியா (880 டன்) இருக்கிறது. இதற்கடுத்து மூன்று இடங்களில் ஜப்பான் (845), துருக்கி (641), நெதர்லாந்து (612) உள்ளன.