தகவல் சுரங்கம் : உலக ஜெல்லி மீன் தினம்
தகவல் சுரங்கம்உலக ஜெல்லி மீன் தினம்ஜெல்லி மீன்கள் குழியுடலிகள் வகையை சேர்ந்தது. இவை லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் தோன்றியது. இதன் உடலில் 95 சதவீதம் தண்ணீர் தான் உள்ளது. எலும்பு, இதயம், மூளை ஆகியவை இல்லை. உடலின் நடுப்பகுதியில் வாய் உள்ளது. இதில் பல வகைகள் உள்ளன. அகலம் 5 செ.மீ.,- 3 அடி இருக்கும். மீன், இறால், நண்டு, நுண்ணிய செடிகளை உணவாக உட்கொள்கிறது. சராசரி ஆயுட்காலம் 1 - 3 ஆண்டுகள். ஜெல்லி மீன்கள் பற்றி ஆய்வு மேற்கொண்ட ஜெர்மன் தாவரவியலாளர் எர்ன்ஸ்ட் ஹாக்கல் பிறந்த நாளான நவ. 3, உலக ஜெல்லி மீன்கள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.