தகவல் சுரங்கம் : உலக பாம்புகள் தினம்
தகவல் சுரங்கம்உலக பாம்புகள் தினம்பூமியில் 3500 வகை பாம்புகள் உள்ளன. இதில் 600 வகை விஷம் கொண்டவை. பொதுவாக பாம்புகள் சுற்றுச்சூழல் சமநிலையை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இவற்றை பாதுகாக்க வலியுறுத்தி ஜூலை 16ல் உலக பாம்புகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகின் நீளமான பாம்பாக 'கிங் கோப்ரா' உள்ளது. பாம்புக்கு வெளிப்புற காது கிடையாது. அதன் தாடையில் உள்ள எலும்புகள் ஒலியை உணரச்செய்கிறது. அதேபோல நாக்கின் மூலம் தண்ணீர், காற்று, நிலத்தில் உள்ள வாசனையை உணர்கிறது. இதனால் தான் எப்போதும் நாக்கை வெளியே நீட்டியவாறு உள்ளது.