தகவல் சுரங்கம் : உலக தர நிர்ணய தினம்
தகவல் சுரங்கம்உலக தர நிர்ணய தினம்உலகில் நுகர்வோருக்குத் தரமான பொருட்களையே தயாரித்து வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, சர்வதேச தர நிர்ணய அமைப்பு (ஐ.எஸ்.ஓ.,) உலக தொலைத்தொடர்பு யூனியன் (ஐ.டி.யூ.,), உலக மின் தொழில்நுட்ப ஆணையம் (ஐ.இ.சி.,) ஆகியவற்றின் உறுப்பினர்கள் இணைந்து அக். 14ல் உலக தர நிர்ணய தினம் கடைபிடிக்கப்படுகிறது. தரமான பொருட்களை உருவாக்க பாடுபடும் தொழில்துறை வல்லுநர்களின் சேவைகளை பாராட்டும் விதமாகவும் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. சந்தையில் ஒரு பொருள் நீடிக்க, அதன் தரம் சரியாக இருப்பது அவசியம்.