தகவல் சுரங்கம் : உலக ஆமைகள் தினம்
தகவல் சுரங்கம்உலக ஆமைகள் தினம்ஜெல்லி மீன்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்தவது, கடல் புற்களை நிலைநிறுத்துதல், கடலோர மணல் திட்டுகளை வளப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் கடலின் சுற்றுச்சூழலுக்கு ஆமைகள் உதவுகின்றன. ஆமைகள் அழிவுக்கு பிளாஸ்டிக் குப்பைகள் முக்கிய காரணம். ஆமைகள், அதன் வாழ்விடங்களை பாதுகாக்க வலியுறுத்தி மே 23ல் உலக ஆமைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 300 வகை ஆமைகள் உள்ளன. ஆயுட்காலம் 150 - 300 ஆண்டுகள். இவை ஊர்வன இனத்தை சேர்ந்தவை. மணிக்கு 5.5 கி.மீ., வேகத்தில் செல்வதால் எளிதில் சுறா, திமிங்கலங்களுக்கு இரையாகின்றன.