மேலும் செய்திகள்
தகவல் சுரங்கம் : ரேடியோ, பெண்கள் தினம்
13-Feb-2025
தகவல் சுரங்கம்முதல் பெட்ரோல் கார்இன்று பலரும் கார் பயன்படுத்துகின்றனர். பல நவீன வகை கார்கள் அறிமுகமாகி விட்டன. முதன்முதலில் எரிபொருளில் இயங்கும் காரை உருவாக்கியவர் ஜெர்மனியின் கார்ல் பென்ஸ். 1844ல் பிறந்த இவர், இன்ஜினியரிங் முடித்தார். மனைவி பெர்தா ரிங்கருடன் இணைந்து 1872ல் இரண்டு ஸ்ட்ரோக் இன்ஜினை உருவாக்கி காப்புரிமையும் பெற்றார். மேலும் வாட்டர் ரேடியேட்டர், ஸ்பார்க்பிளக், கிளட்ச், கியர் ஷிப்ட் உள்ளிட்ட கருவிகளையும் கண்டுபிடித்தனர். பின் 'பென்ஸ்' நிறுவனத்தை தொடங்கி, 1886ல் பெட்ரோலில் இயங்கும் உலகின் முதல் காரை உருவாக்கி சாதித்தார்.
13-Feb-2025