உள்ளூர் செய்திகள்

அறிவியல் துளிகள்

01. மூளையில் ரத்த ஓட்டத்தைக் கண்காணிப்பது சுலபமல்ல. அஞ்சல்தலை அளவே உள்ள ஒரு புதிய கருவியை அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலை வடிவமைத்துள்ளது. அல்ட்ரா சவுண்ட் தொழில்நுட்பம் வாயிலாக இந்தக் கருவி ரத்த ஓட்டத்தை அறிய உதவுகிறது.02. ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி அதீத தொலைவில் உள்ள புதிய கோள்கள், நட்சத்திரங்களைக் கண்டுபிடித்து வருகிறது. தற்போது புதிதாக உருவாகிக் கொண்டிருக்கும் மூன்று கேலக்ஸிகளை இது படமெடுத்துள்ளது. இது உலகெங்கும் உள்ள விஞ்ஞானிகள், வானியல் ஆர்வலர்களிடையே மிகுந்த ஆர்வத்தைத் துாண்டியுள்ளது. 03. அமெரிக்காவைச் சேர்ந்த வாஷிங்டன் பல்கலை செயற்கை நுண்ணறிவைக் கொண்டு செயல்படும் ஒரு புது ஹெட்போனை உருவாக்கி உள்ளது. இதை அணிபவர் கூட்டத்தில் இருக்கும் ஒருவரைப் பார்த்தால் அவர் பேசுவது மட்டும் கேட்கும். வேறு ஒலிகள் கேட்காது. 04. உடலில் 'டாட்டு' குத்திக் கொள்வது தற்போது பிரபலமாகி வருகிறது. சுவீடனைச் சேர்ந்த லுண்ட் பல்கலை 'டாட்டு'களால் புற்றுநோய் வரும் வாய்ப்பு, 21 சதவீதம் அதிகரிப்பதாக ஆய்வுப்பூர்வமாக நிறுவியுள்ளது. பாதுகாப்பான வகையில் 'டாட்டு'களை வரைந்து கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளது. 05. செவ்வாயின் நிலவு போபோஸ். இதன் பல்வேறு படங்களை ஆராய்ந்த விஞ்ஞானிகள், இது ஒரு வால்நட்சத்திரமாகவோ அல்லது அதன் ஒரு பகுதியாகவோ இருந்து, செவ்வாயின் ஈர்ப்பு விசையால் அதைச் சுற்றிவரும் நிலவாக மாறியிருப்பதாக கண்டுபிடித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !