உள்ளூர் செய்திகள்

அறிவியல் துளிகள்

01. அமெரிக்காவைச் சேர்ந்த என்.ஐ.ஏ. பல்கலை மேற்கொண்ட ஆய்வில், கலோரிகள் குறைந்த வீகன் உணவு முதுமையைத் தள்ளிப்போடுவது தெரியவந்துள்ளது. சராசரியாக 40 வயதுடைய 21 ஜோடி இரட்டையர்களை ஆய்வில் ஈடுபடுத்தி இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.

02. அல்சைமர் நோய்க்கு முக்கிய காரணம் மூளை செல்களில் டாவ் புரதம் (Tau protein) படிவது. TTCM2 எனும் மருந்தை மூக்கின் வழியே ஸ்ப்ரேயாகச் செலுத்துவதன் வாயிலாக இந்தப் புரதத்தை அழிக்க முடியும் என்று, அமெரிக்காவைச் சேர்ந்த டெக்சாஸ் பல்கலை கண்டறிந்துள்ளது. 03. சிங்கப்பூர் தேசிய பல்கலை 13,738 பேரை ஈடுபடுத்தி மேற்கொண்ட ஆய்வில்,தினமும் பழங்கள் சாப்பிடுபவர்களுக்கு மற்றவர்களை விட மன அழுத்தம் தொடர்பான நோய்கள் 21 சதவீதம் குறைவாகவே ஏற்படுவதாகத் தெரியவந்துள்ளது. 04. இதய மாற்று அறுவை சிகிச்சையின் போது, இதயம் மாற்றும் நேரம் வரை சிகிச்சை பெறுபவரை உயிர் வாழ வைக்கும் செயற்கை இதயத்தைப் பொருத்தி, அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை செய்துள்ளனர். கலிபோர்னியாவைச் சேர்ந்த நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இது முழுதும் இயந்திரமயமானது. 05. கோள் (Planet) என்பதற்கான வரையறை விரைவில் மாற்றப்படலாம் என்று சர்வதேச விண்வெளி ஒன்றியம் (IAU) தெரிவித்துள்ளது. இப்படியாக 2006இல் மாற்றப்பட்ட போது தான் ப்ளூடோ கிரகமல்ல என்று அறிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !