உள்ளூர் செய்திகள்

அறிவியல் துளிகள்

01. அமெரிக்காவில் உள்ள ஜியார்ஜியா உளவியல் பல்கலை மேற்கொண்ட ஆய்வில், இசை வாயிலாக நாம் இழந்த நினைவுகளை மீட்டெடுக்க முடியும் எனக் கண்டறியப்பட்டுள்ளது. நினைவாற்றலை அதிகரிக்கவும் இசை உதவும் எனத் தெரியவந்துள்ளது.

02. டென்மார்க் நாடு சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத உலகின் முதல் அமோனியா தயாரிப்பு மையத்தைத் திறந்துள்ளது. இது முழுக்க முழுக்க சூரிய, காற்றாலை மின்சார ஆற்றலைக் கொண்டு இயங்கும். 03. கருப்பு க்ரௌஸ் (Black grouse) எனப்படும் பறவைகள் வாழ்விட இழப்பால் மிக வேகமாக அழிந்து வந்தன. இங்கிலாந்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளால் இவற்றின் எண்ணிக்கை உயர்ந்துள்ளன. 04. தென் அமெரிக்க நாடான சிலியின் கடற்கரையிலிருந்து 1450 கி.மீ., தொலைவில் கடலுக்கடியில் ஒரு மலையைக் கண்டுபிடித்துள்ளனர் ஆய்வாளர்கள். 3 கி.மீ., உயரமுள்ள இந்த மலையைச் சார்ந்து குறைந்தபட்சம் 20 புதிய உயிரினங்கள் வாழும் சாத்தியம் உள்ளதாகக் கூறுகின்றனர். 05. குழந்தைகளுக்கு மூளையில் ஏற்படுகின்ற DHG கட்டிகளைச் சரிசெய்ய இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. தற்போது லண்டன் புற்றுநோய் ஆய்வு மைய விஞ்ஞானிகள் மார்பகப் புற்றுநோய்க்குப் பயன்படும் ரிபோசிக்ளிப் (Ribociclib) எனும் மருந்தை இந்த நோய்க்கும் பயன்படுத்தலாம் என கண்டறிந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !