அறிவியல் துளிகள்
01. இறைச்சிக்காக ஆடு, பன்றி, கோழி, மாடுகளை வளர்ப்பது சுற்றுச்சூழலுக்குப் பலவித தீமைகள் செய்கிறது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மக்குவாரி பல்கலை ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், மலைப்பாம்புகளை இவ்வாறு வளர்த்து உண்பது பல வழிகளில் நன்மை செய்யும் என்று தெரியவந்துள்ளது. விவசாயத்திற்குத் தொல்லை தரும் உயிரினங்களை உட்கொள்வதாலும், அவற்றின் மாமிசத்தில் அதிகளவு புரதம் இருப்பதாலும் விஞ்ஞானிகள் மலைப்பாம்பு உணவைப் பரிந்துரைக்கின்றனர்.02. பாரம்பரிய மருத்துவத்தில் பல்வேறு பயன்பாடுகளை உடையது அதிமதுரம் (Licorice). இதிலிருந்து பல இனிப்புகள் அமெரிக்காவில் தயாரிக்கப்படுகின்றன. இதில் உள்ள க்ளைசைர்ஹிசிக் அமிலம், ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும் என சுவீடன் நாட்டைச் சேர்ந்த லின்கோபிங்க் பல்கலை சமீபத்திய மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒரு நாளைக்கு 57 கிராமிற்கு அதிகமாக எடுத்துக் கொள்வது ஆபத்து என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.