உள்ளூர் செய்திகள்

இன்று புதிதாய் பிறந்தோம்

மார்கழி மாதத்தின் இறுதிநாள் போகிப்பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. ''பழையன கழிதலும் புதியன புகுதலும்'' என்பது வழக்கம். பழமையை விடுத்து மனிதன் புதுமைக்குள் செல்லவேண்டும் என்பதை உணர்த்தும் விழா இது.

''இன்று புதிதாய் பிறந்தோம்'' என்ற சிந்தனையை போகி நமக்கு வழங்குகிறது. அதே சமயத்தில் புதுமை என்ற பெயரால் மேலைநாட்டு நாகரிகத்தை விரும்புவது புதுமை அல்ல. நாகரிகம் என்பது ஒழுக்கத்தை மையமிட்டதாகும். நம் பாரம்பரியம், பண்பாடுகளை இழக்காமல் விழிப்போடு இருப்பதும் அவசியம். போகியன்று வீட்டைத் தூய்மைப்படுத்தி பழைய குப்பைகளை எரித்துக் கொளுத்துவர். கிராமங்களில் சுவரில் சுண்ணாம்பு அடித்து செம்மண் பட்டை பூசுவர். வீடு முழுக்க அழகாக மாக்கோலம் இடுவர். வீட்டை அழகுபடுத்துவது போல, நம் உள்ளத்திலும் நல்ல சிந்தனையை மலரச் செய்திட போகி நாள் வழி வகுக்கிறது. உள்ளமும், இல்லமும் தூய்மையாகும்போது அங்கு எல்லா சுகபோகங்களும் நிறைந்திருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்