அவரக்காய் ரிமோட்
ஆயக்கா குருவம்மா எல்லம்மாஅன்பரசி கருவாச்சி சொக்கிஎல்லோரும் ஒன்னாச் சேரும் ஒரு நாளுஅது தைப்பொங்கத் திருநாளு!உண்ண உடுக்க பூவெக்கஎப்பவுமா வருது இப்படி ஒரு நாளுஅம்பாரமாக் கரும்புச் சக்கைஆளாளுக்குக் கடிச்சுத் துப்பிவாசப்படி ஓரத்தைதேரொசரம் நிறைச்சு வைச்சுதேனொழுகத் திட்டு வாங்கும் திருநாளு!'விக்கோ டர்மரிக்'கை விட்டுட்டுவிறைச்ச மஞ்சள விழுதாக்கிவிடியுமுன்ன பூசிக் குளிச்சுகதம்பம் கட்டி முடிச்சுகையெல்லாம் நெய் மணக்கும் ஒரு நாளு.போலிச் சரிகைபோட்ட பட்டுகட்டிநிசமாச் சிரிச்சு நிறையப் பூவைச்சுநின்னு பேசாம நிக்காம ஓடிட்டேதெருவடைக்கப் பொங்கச் சோறுவாங்கித் தின்னு வாயாறும் திருநாளு.வருஷத்துக்கொரு வாட்டி தானேவருமிந்தப் பெருநாளு!கால் மடக்கி ராவெல்லாம் உட்கார்ந்துகலர்க் கோலப் போட்டியிலஅந்தத் தெரு இந்தத் தெருஎல்லாத்தையும் ஜெயிச்சுஅப்புறமும் அடங்காத் திமிரோடஅல்லி அரசாணியாய்வலம் வருமொரு நாளு!வருஷத்துக்கொரு வாட்டி தானேவருமிந்தப் பெருநாளு!ஜில்லி, ஜிமிக்கி, சூரன், வழுதின்னுகூப்பிட்ட மாடுகளைமவராசி, மவராசான்னுமூக்கோடு மூக்கு வைச்சுச் சீராட்டிமூக்கணாங்கயித்துக்கொரு லீவு விட்டுசாணித் தங்கத்தையும்புண்ணாக்குப் புதையலையும்பெருஞ் சொத்தா நினைக்கிற திருநாளு!கோலம் போட்ட மண்பானைபுதுசாக் குசவன் கைப்பட்ட வெட்கத்துலவளைஞ்சு நிக்கும் மண்ணடுப்புஅகண்ட முதுகைப் போலஅம்சமான கண்கரண்டி அத்தனையும்ஆத்தா சீர் கொடுக்கும் அந்நாளுஅந்த ஒரு நாளு!ஆயக்கா குருவம்மா எல்லம்மாஅன்பரசி கருவாச்சி சொக்கிஎல்லாரும் ஒன்னாச் சேர்ந்தஅந்த ஒரு நாளு -இப்பல்லாம் 'டிவி'க்கு முன்னாலஅண்ணாந்து பார்த்தபடிஅவுக அவுக வூட்டுலஅவரக்காய் ரிமோட்லனு ஆயாச்சு!- தமிழச்சி தங்கப்பாண்டியன்