உள்ளூர் செய்திகள்

பூ பூக்கும் மாசம்.... தை மாசம்!

பதினாறு வகை பாடல்களை இசையுடன் பாடி பொங்கலை கொண்டாடும் வழக்கம் பளியர் இன மக்களிடையே இன்றும் உள்ளது. பொங்கல் நாளை இயற்கை திருவிழாவாக ஆதிவாசிகள் வர்ணிக்கின்றனர்.'பட்டி பெருக ... பால் பானை பொங்க .. பொங்கலோ... பொங்கல்' என நாம் வரவேற்போம். ஆனால் கொடைக்கானல், சிறுமலை, பழநி பகுதியில் வசிக்கும் மலைவாழ் சமூகத்தினரான பளியர்கள் தங்கள் வன தேவதைக்கு இரவினில் பொங்கல் வைத்து புல்லாங்குழல் ஊதியும், மேளம் அடித்து இசைத்தும் பொங்கலை வரவேற்கின்றனர். அதுமட்டுமின்றி, இசையுடன் பதினாறு வகை பாடல்களையும் இசைக்கின்றனர்.அந்த பாடல்...'வன தேவையே எங்கள் முன் வாருமம்மாஎங்களுக்கு நல்லாசி தாருமம்மா ...ஜாதிக்காய், கடுக்காய், ஏலக்காயில்மாலை கட்டி, மரகத பூஞ்சோலை கட்டிவாசல்தோறும் பூக் கோலமிட்டுள்ளோம்மலைகளில் ஓய்வெடுக்கும் சூரியன்கிழக்கில்ஏறி நமக்கு விளக்காக வருகிறான்...மலை வண்ணத்து அழகினிலேமயங்கித்தான் நிற்கிறான்...எண்ணங்கள் சிறக்கஉடல் நலம் பெருகதேனும், தினை மாவும் கலந்து உனக்குநெய்யிட்டு... தீயிட்டு வணங்கிறோம்... தாயே'என புல்லாங்குழல் இசையுடன் பாடி மகிழ்கின்றனர்.விஷப்பூச்சிகளுக்காகவும் பாட்டுமலை வளம் செழித்து பயிர்கள், உயிர்கள் தழைத்து வளர வேண்டியும், நோய் நொடிகள் அண்டாமல் இருக்கவும், பாம்பு உட்பட விஷ பூச்சிகள் தங்களை கடிக்காமல் இருக்கவும், தேன், கடுக்காய் நன்றாக கிடைக்க வேண்டியும் 16 வகையான பாடல்களை புல்லாங்குழல் இசையுடன் பாடுகின்றனர். இதற்கு தகுந்த மாதிரி பளியர் மேளம் வாசிக்கப்படுகிறது. அதற்கேற்ப நடனமாடுவர்.இது குறித்து கடுகுதடி புதுாரை சேர்ந்த பொன்னுச்சாமி,60, கூறியதாவது: பொங்கல் என்பது எங்களுக்கு இயற்கை திருவிழா. பூப்பூக்கும் மாதமாக அதனை கருகிறோம். வசந்த கால துவக்கமே பொங்கல். வன தேவதையை வணங்கி வரவேற்கும் திருவிழா.இயற்கையோடு வாழ்வுபொங்கலுக்கு காப்பு கட்டி, தை மாதத்தில் இவ்விழா நடக்கும். அன்றைய தினத்தில் மஞ்சள் நீர் ஊற்றி, பச்சரிசி பொங்கல் வைப்போம்.தேன், தினை மாவு கலந்து மாவிளக்கு ஏற்றி இரவில் வழிபடுவோம். காலையில் நாங்கள் காடுகளுக்கு சென்று தேன், கடுக்காய், பாறை, பாசி சேகரிப்போம். வீடு திரும்பிய பின்பு மலைப்பகுதியில் எங்கள் தெய்வத்தை வணங்கி வழிபடுவோம். வன தேவதையை பொங்கல் அன்று வழிபடமுடியாவிட்டால், அவரவர் வீடுகளில் விளக்கு ஏற்றி வழிபடுவோம். அப்போதும் 16 வகை பாடல்களை புல்லாங்குழலில் வாசிப்போம். இயற்கையை காத்து, இயற்கையோடு வாழ்க்கை என்பது தான் எங்கள் மகிழ்ச்சி. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்