உள்ளூர் செய்திகள்

பருத்திப்பொங்கல் மின்னல் பொங்கல் செய்வோமா

'வாம்மா மின்னல்னு' சொல்ற மாதிரி மின்னல் பொங்கல்… 'பருத்தி எடுக்கயிலே… பலநாளு காத்திருந்த' பருத்திப் பொங்கல்… நித்தம் நித்தம் நெல்லுச்சோறுக்கு நெய் மணக்கும் கத்தரிக்காய் சட்னி, 'சுள்ளுனு… குடிக்க சூப்பா, சாறானு பட்டிமன்றம் வைக்கிற மாதிரி' கீரைச்சாறு… என சவுராஷ்டிரா சமூகத்தினரின் உணவு மெனுக்கள் சுவைக்கு நற்சான்றிதழ் தருவன. பருத்திப் பொங்கல் மட்டும் ரொம்ப நேரம் வேலை வாங்கிரும். சாப்பிட ஆரம்பிச்சா… அவ்வளவு சீக்கிரம் சுவையை மறக்க முடியாது. மற்ற மெனுக்கள் ரொம்ப ஈசியாவே முடிஞ்சுரும். இப்போ சமைக்க தேவையானதையும், செய்முறை பற்றியும் தெரிஞ்சுக்கலாம்.பருத்திப்பொங்கல்பச்சரி - கால்படிபருத்தி விதை - 1/4 கிலோகருப்பட்டி - 3/4 கிலோதுருவிய தேங்காய் - ஒருமூடிமுந்திரி பருப்பு - 50 கிராம் நெய் - 150 கிராம் ஏலப்பொடி - சிறிதளவுபருத்தி விதையை கழுவி இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் மிக்சி அல்லது கிரைண்டரில் பருத்தி விதையை அரைத்து பால் எடுக்க வேண்டும். கால்படி அரிசிக்கு ஒரு படி பருத்திப்பால் வேண்டும் என்பதால், மூன்று முறை அரைத்து பால் எடுக்க வேண்டும்.பாலை அடுப்பில் வைத்து கொதி வந்தவுடன் பச்சரியை சேர்த்து வேகவிட வேண்டும். குக்கரில் என்றால் மூன்று விசில் சத்தம் வந்தவுடன் இறக்க வேண்டும். கருப்பட்டியை தனியாக எடுத்து, சிறிது தண்ணீர் ஊற்றி பாகாக காய்ச்சி வடிகட்ட எடுக்க வேண்டும். இதை வேகவைத்த அரிசியுடன் சேர்த்து கிளற வேண்டும். முந்திரிபருப்பை நெய்யில் வறுத்து ஏலப்பொடியுடன் சேர்த்து கிளறினால் பருத்திப்பால் பொங்கல் தயாராகி விடும். பருத்தியின் வாசனை, கருப்பட்டியின் வாசனை கலந்து சாப்பிட, வா … வா என்றழைக்கும்.கத்தரிக்காய் சட்னிகத்தரிக்காய் - 1/4 கிலோ தக்காளி - 1/2 கிலோ சிறிய வெங்காயம் - 50 கிராம் மிளகாய் வற்றல் - 12பச்சை மிளகாய் - 2 பெருங்காயம் - சிறிதளவு உப்பு - தேவையான அளவுசெய்முறைகத்தரிக்காய், தக்காளியை நறுக்கி வைக்க வேண்டும். குக்கரில் ஒரு டம்ளர் அளவுக்கு தண்ணீர் ஊற்றி அனைத்தையும் சேர்த்து 10 நிமிடங்கள் குக்கரில் வேகவிட வேண்டும். அதன் பின் ஆறவைத்து மிக்சியில் ஒரு சுற்று சுற்றி எடுக்க வேண்டும். எண்ணெய்யில் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை தாளித்து கத்தரிக்காய் சட்னியில் சேர்க்க வேண்டும்.கீரைச்சாறுமணத்தக்காளி கீரை, அகத்தி கீரை - ஒரு கட்டு அரிசி களைந்த தண்ணீர் - நான்கு டம்ளர் அளவுகசகசா - 50 கிராம், தேங்காய் - அரை மூடி மிளகு, சீரகம், பெருங்காயம் - சிறிதளவு உப்பு - தேவைக்கேற்ப.செய்முறைதேங்காய், கசகசா, மிளகு, சீரகத்தை தனியாக அரைக்க வேண்டும். மற்ற அனைத்தையும் குக்கரில் வேகவிட வேண்டும். கீரை வெந்ததும் தேங்காய் கலவையை சேர்த்து ஒரு முறை கொதி வந்ததும் கடுகு, உளுந்து தாளித்து இறக்கி விடலாம். சாதத்துடன் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும்.மின்னல் பொங்கல்பச்சரிசி குருணை - 300 கிராம்கடுகு - 10 கிராம்எண்ணெய் - நான்கு கரண்டிகறிவேப்பிலை - சிறிதளவுபெருங்காயம் - சிறிதளவு உப்பு - தேவைக்கேற்பசெய்முறைஅடுப்பில் வாணலியை வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். குக்கரில் தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் பச்சரிசி குருணை மற்றும் தாளித்தவற்றை சேர்த்து மூன்று விசில் வரும் வரை விட வேண்டும். வெள்ளை நிற சாதத்தில் ஆங்காங்கே கடுகும், கறிவேப்பிலையுமாக … நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டி பார்க்குதுனு… பார்வைக்கும், சுவைக்கும் பரவசம் தரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்