உள்ளூர் செய்திகள்

கோயிலில் பார்ப்போம்... பழைய மாட்டுவண்டி!

ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கையில், முற்காலபாண்டியர்கள் காலத்தில் கட்டப்பட்ட மங்களேஸ்வரி, மங்களநாத சுவாமி கோயில் திருப்பணியில் பயன்படுத்தப்பட்ட, மாட்டு வண்டியை கோயில் நிர்வாகத்தினர் இன்றளவும் பாதுகாத்து வருகின்றனர். பிற்கால பாண்டியர்கள், விஜய நகர நாயக்க மன்னர்கள் ஆட்சியிலும் இக்கோயிலில் புனரமைப்பு பணிகள்செய்யப்பட்டது.மங்களநாத சுவாமி சன்னதி கோபுரம், பாண்டியர்கள்காலத்தில் அமைக்கப்பட்டது. மங்களேஸ்வரி சன்னதி கோபுரம்சமீபத்தில் கட்டப்பட்டது. இதில் உமா மகேஸ்வரி சன்னதிதனியாக உள்ளது. அதில் ஒரு பகுதியில் தான் மரகத நடராஜர் சன்னதி அமைந்துள்ளது. சேதுபதி மன்னர்கள் காலமான 16ம் நுாற்றாண்டில் கோவில் புனரமைப்பு பணிகள் கிழவன் சேதுபதியால் நடத்தப்பட்டது.இவரது ஆட்சி காலம் 1674 முதல் 1710 வரை இருந்தது. அப்போது உத்தரகோசமங்கை கோயில் புனரமைப்பு பணிகளின் போது வாலிநோக்கம் துறைமுகம் பகுதியில் இருந்த கடற்கரை பாறைகள், கோயில் திருப்பணிக்கு பயன்படுத்தப்பட்டது. அங்கிருந்து கடற்பாறைகளை கோவிலுக்குகொண்டு வருவதற்காக இரட்டை மாட்டு வண்டி பயன்படுத்தப்பட்டது. அப்போது தமிழர்கள் பயணத்திற்கு மாட்டுவண்டி, குதிரை பூட்டிய சாரட் வண்டிகளை பயன்படுத்தினர். சரக்குகள் கையாள்வதற்கு மாட்டு வண்டிகளை அதிகம் நம்பி இருந்தனர்.அந்த மாட்டு வண்டியை, ராமநாதபுரம் சமஸ்தானம் சார்பில் இன்றும், உத்தரகோசமங்கை கோயிலில் வைத்து பாதுகாத்து வருகின்றனர். 16, 17ம் நுாற்றாண்டில் வடிவமைக்கப்பட்ட மாட்டுவண்டியை இன்றும் பக்தர்கள் காட்சிக்காக கோயில் நிர்வாகத்தினர் பாதுகாத்து வருவது பாராட்டதகுந்தது. மாட்டு வண்டிகளை பார்ப்பதே அரிதாகி உள்ள நிலையில், கோயில் நிர்வாகம்பாதுகாத்து வரும் மாட்டு வண்டி வரும் தலைமுறைக்கு ஒரு நினைவு பொருளாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.-கதிர், கபினிஸ்ரீ


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்