உள்ளூர் செய்திகள்

கரும்பு தோசையும், கப் கேக்கும்!

கரும்பு இல்லாமல் பொங்கல் பண்டிகை இல்லை. பொங்கல் அன்று வெறும் கரும்பை சுவைத்து சாறை குடித்து சக்கையை துப்புவதா? கரும்பு பயன்படுத்தி பொங்கலை ஜமாய்க்க என்ன வழி? கவலைய விடுங்க! இனி கரும்புச்சாறில் விதவிதமாக 'டிஷ்' செய்து அசத்தோ அசத்துன்னு அசத்தி எல்லோரையும் சாப்பிட வைக்கலாம் என்கிறார் மதுரை உணவு கலை நிபுணர் காயத்திரி. இதோ அவர் தரும் கரும்பு ஸ்பெஷல் உணவுகள்...கரும்பு பொங்கல்தேவையான பொருட்கள்:கரும்புச்சாறு - 1 கப்பச்சரிசி - 1 கப்பாசிப்பருப்பு - 1/4 கப்பால் - அரை லிட்டர்முந்திரி - 2 மேசை கரண்டிகிஸ்மிஸ் - 10நெய் - 3 மேசை கரண்டிசெய்முறை: முதலில் 5 கப் கரும்புச்சாறை முக்கால் கப் வரும் வரை சுண்டக் காய்ச்சி ஆற வைக்க வேண்டும். பின் அதில் 2 கப் தண்ணீர் ஊற்றி அரிசி, பாசிப்பருப்பு சேர்த்து கொதி வந்தவுடன் பாதி வேகும் வரை மெல்லிய தீயில் வைத்து கிளறவும். பின் பால் சேர்த்து நன்கு மசியும் வரை வேகவிடவும். இந்த கலவை கெட்டியானவுடன் கரும்புப்பாகு ஊற்றி இறக்கி, நெய்யில் வறுத்த முந்திரி தூவி பரிமாறவும்.கரும்பு தோசைதேவையான பொருட்கள்:அரிசி மாவு - 1 கப்மைதா - அரை கப்கரும்புச்சாறு - ஒன்றரை கப்ஏலாக்காய் தூள் - அரை தேக்கரண்டிமுந்திரிபருப்பு நறுக்கியது 2 மேசை கரண்டிசெய்முறை: அரிசி மாவு, மைதா மாவு, ஏலக்காய் தூள் மற்றும் கரும்புச்சாறு சேர்த்து சற்று இளக்கமாக கலக்கவும். அதில் நறுக்கிய முந்திரி சேர்த்து தோசை கல்லில் நெய் ஊற்றி சிறு சிறு தோசைகளாக ஊற்றி எடுத்தால் இனிப்பான தோசை ரெடி.கரும்பு பாயாசம்தேவையான பொருட்கள்:அரிசி - 1/4 கப்பால் - 1 கப்கரும்புச்சாறு - 1 கப்முந்திரி - 2 மேசை கரண்டிகிஸ்மிஸ் - 10நெய் - 2 மேசை கரண்டிசெய்முறை: அரிசியில் அரை கப் தண்ணீர் சேர்த்து பாதி வேகும் போது அடுப்பை மெல்லிய தீயில் வைக்கவும். பின் அதில் கரும்புச்சாறு கலந்து நன்கு வேகவிட்டு, கரண்டியால் நன்கு மசித்து கெட்டியானவுடன் இறக்கவும். நெய்யில் கிஸ்மிஸ், முந்திரி வறுத்து பாயாசத்தில் சேர்க்கவும். சூடு குறைந்தவுடன் காய்ச்சி ஆறிய பால் கலந்து பரிமாறவும்.கரும்பு கப் கேக்தேவையான பொருட்கள்:மைதா - 1 1/4 கப்மில்க் மெய்ட் - 200 மி.லிகரும்பு ஜூஸ் - 3/4 கப்பேக்கிங் கப் - 3/4 தேக்கரண்டிபேக்கிங் சோடா - 1/4 தேக்கரண்டிடுட்டி புரூட்டி - 1/4 கப்வினிகர் - 1 தேக்கரண்டிசெய்முறை: ஓவனை 175 டிகிரியில் சூடு படுத்தவும். மைதா மாவு, பேக்கிங் பவுடர், சோடா கலந்த கலவையை சலிந்துக் கொள்ளவும். அதில் வெண்ணெய், மில்க் மெய்ட் சேர்த்து அத்துடன் கரும்பு ஜூஸ், வினிகர் கலந்து கலக்கிய பின், மாவு கலவை, டுட்டி பூரூட்டி மிக்ஸ் செய்து கப் கேக் லைனர் அல்லது சிறிய கிண்ணத்தில் ஊற்றி 25 நிமிடங்கள் பேக் செய்தால் சுவையான 'கப் கேக்' சாப்பிடலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்