உள்ளூர் செய்திகள்

அதிமேதாவி அங்குராசு!

வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்! சிலதுகள் சேர்ந்தால் சங்கடம்தான்!இவைகளுடன் இவைகள் சேராமல் பார்த்துக் கொள்க...* வெண்ணெயுடன் காய்கறிகளை சேர்த்து சாப்பிட கூடாது. இதனால் தீமை விளையும்.* நல்லெண்ணையில் கோதுமையை சமைத்தால் கண்ணைக் கெடுக்கும்.* மீன் சாப்பிடும்போது அதனுடன் வெல்லம், சர்க்கரை, கரும்பு போன்றவற்றை சாப்பிடக்கூடாது.பள்ளம் எங்கே! தோட்டம் எங்கே!சாதாரண விஷயங்களிலேயே புரிந்து கொள்ள முடியாத ஆச்சரியங்கள் சில சமயம் ஒளிந்திருக்கிறது. அதுவே உலகின் அதிசயமென்றால்...உலகில் ஒவ்வொரு அதிசயமும் புரிந்து கொள்ள முடியாத ரகசியத்தை கொண்டுள்ளது. பிரமிடுகள் கொண்டிருக்கும் ரகசியத்திற்கு இன்னும் விடை கிடைக்கவே இல்லை. மிகப்பெரிய பிரமிடான, கிஸா பிரமிடு, 23 லட்சம் கற்களால் கட்டப்பட்டது. ஒவ்வொரு கல்லும், 2 முதல் 9 டன் வரை எடையுடையது. இந்த கற்களை எங்கிருந்து, எப்படி இழுத்து வந்தனர். ஒன்றின் மீது ஒன்றாக எப்படி ஏற்றினர் என்பது இன்னும் மர்ம முடிச்சாகவே உள்ளது.இந்த அளவுக்கு கற்களை தோண்டி எடுத்தால், பிரம்மாண்டமான பள்ளங்கள் ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால், பல மைல் சுற்றளவிற்கு எந்த பெரிய பள்ளமும் காணப்படவில்லை. இதைப் போலவே, 1947க்கும், 1956க்கும் இடைப்பட்ட காலத்தில் பாலஸ்தீனத்தின் மேற்கு பகுதியில் உள்ள, 'கும்ராம்' மலைக்குகையில் இருந்த, 2,000 ஆண்டுகள் பழமையான, 900 ஆவணங்கள் கிடைத்தன. மெல்லிய செப்பேடுகளில் எழுதப்பட்ட இவை, 'சாக்கடல் சுருள்கள்' என்று அழைக்கப்படுகின்றன. ஹீப்ரூ மொழியில் எழுதப்பட்ட சுருள்கள் ஒவ்வொன்றும் ஒரு ரகசியம். தங்கப் புதையலுக்கான தகவல்கள். புதையல் கரிசிம் மலையில் இருக்கிறது என்கிறது ஒரு சுருள். ஆனால், கரிசிம் மலை எங்கிருக்கிறது என்பதுதான் யாருக்கும் தெரியவில்லை.பாபிலோன் தொங்கும் தோட்டம் எங்கிருக்கிறது என்பதே, ஒரு ரகசியம்தான். கி.மு., 400ல் பெரோசாஸ், என்பவர்தான் முதன் முதலில் பாபிலோன் தொங்கும் தோட்டம் பற்றி எழுதினார்.பாக்தாத்துக்குப் பக்கத்தில், கி.மு., 600ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது என்பது சிலருடைய கருத்து. சமீபத்தில், 'யூப்ரிடிஸ்' நதியருகே, 75 அடி அகல சுவரை கண்டுபிடித்து இருக்கின்றனர். இதை தொங்கும் தோட்டம் என்று சிலர் நம்புகின்றனர்.உலகில் உள்ள மலைகளில் மிகவும் பணக்கார மலை, ஆல்ப்ஸ் மலைதான். காரணம், ஜெர்மன் நாட்டின் சர்வாதிகாரியாகத் திகழ்ந்த, ஹிட்லர், இரண்டாம் உலகப் போரின்போது எதிரிகளுக்கு பயந்து, தான் வைத்திருந்த பிளாட்டினம், தங்கம், வெள்ளி முதலியவற்றை ஆல்பஸ் மலையில் ஒளித்து வைத்திருப்பதாக நம்பி, மலையெங்கும் அலைந்து திரிந்தது அமெரிக்கப் படை. கடைசியாக, 1945ல் ஒரு புதையலை கண்டுபிடித்தது. அதுவே பல கோடி ரூபாய் பெறுமானம் உடையது. அன்றிலிருந்து மக்கள் கூட்டம் எப்போதும் ஆல்ப்ஸ் மலையில் புதையலை தேடி அலைந்தபடி இருக்கிறது. இதுபோன்று உலக அதிசயங்களில் ஏராளமான ரகசியங்கள் அடங்கி இருக்கின்றன.சிறிய அக்கறை போதுமே!நல்ல துணியில் சிறிதே சிறு கறைபட்டால் அது துணியின் அழகையே சிதைத்துவிடும். கறைகளையும், அவற்றை களையும் டிப்சையும் காண்போம்.* காபி, டீ கறைபட்ட துணியை மிதமான சுடு தண்ணீரில், பத்து நிமிடம் ஊற வைக்கவும். சிறிது போரெக்ஸ் லோஷனை நனைத்து கறையை ஒற்றி எடுத்துவிட்டு மீண்டும் குளிர் நீரில் கசக்கினால் கறை மறையும்.* சாக்லேட் கறை அதிகம் பட்டிருந்தால், 'ஸ்பிரிட்'டை பஞ்சால் ஒற்றி கறை மீது தடவி, பின் கசக்கினால் மறையும்.* மிதமான சூடுள்ள நீரில் ஊற வைத்து பொடி உப்பைப் போட்டு தேய்த்தால் துணியில் ஏற்பட்ட க்ரீம் கறை மறையும்.* கிளிசரினை லேசாக சூடு செய்து, லிப்ஸ்டிக் கறைபட்ட துணியின் மீது சில சொட்டுகள் இட்டுக் கசக்கவும். பின் டிடர்ஜென்ட் உபயோகித்து துவைக்க, கறை மறையும்.* மிதமான சுடு நீரில் நனைத்து, சோடியம் கார்பனேட் உபயோகித்து துவைக்க சேற்றினால் ஏற்பட்ட கறை மறையும்.* துணியில், 'இங்க்' கறை பட்டுவிட்டால் கறைபட்ட இடத்தை, தண்ணீரில் நனைத்து எலுமிச்சை சாறைக் கொண்டு கசக்கினால் கறை மறையும்.இது தபால் அட்டை ஸ்பெஷல்!தபால் தலையின் புகழை அதிகம் கேள்விப்பட்டு இருக்கிறோம். இங்கே, 'அட்டை'யை பற்றி கேள்விப்படுவோம்.* தபால் அட்டை, 1869ல் ஆஸ்திரியாவில் கண்டுபிடிக்கப்பட்டது.* பிரிட்டன் தபால் அட்டையை, 1872ல் வெளியிட்டது.* தபால் அட்டை இந்தியாவுக்கு, 1879ல் வந்தது.* தபால் அட்டை, மூன்று பைசாவுக்கு (காலணா) விற்கப்பட்டது.* தபால் அட்டைகளில் படம், 1889ல் தான் வெளியிடப்பட்டது.* காந்தி படம் போட்ட தபால் அட்டைகள் இந்தியாவில், 195௧ மற்றும் 1969லும் வெளியிடப்பட்டது.* அரசு சம்பந்தப்பட்ட செய்தி களும் விளம்பரங் களும், 1973 ஜூலை 21ல் தபால் அட்டையில் அச்சடிக்கப்பட்டன.* இப்போது, 50 பைசாவுக்கு விற்கப்படும். தபால் அட்டையை அச்சிட, அதை விட அதிகம் செலவாகிறது.* தபால் தலை சேகரிப்பது போல, தபால் அட்டை சேகரிப்பதை, 'டெல்டியாலஜி' என்று கூறப்படுகிறது.என்றென்றும் அன்புடன், அங்குராசு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !