உள்ளூர் செய்திகள்

அதிமேதாவி அங்குராசு !

அனைவருக்கும் எனது அன்பு.டாஸ்கோ - நடனங்கோ ! நடனம் ஆடுபவர்களை, பாட்டு பாடுபவர்களை பார்க்கும்போது அட, சூப்பர் என வியக்க தோணும். 'எப்படி ஆடறாங்க - எப்படி பாடறாங்க' என மலைக்க தோணும். பழமையான நடன வகைகள், புதிய நடன வகைகள் என பற்பல நடன வகைகள் உண்டு. நடனத்தில் மைக்கேல் ஜாக்சன், பிரபு தேவா ஆகியவர்கள் நம்மை இது உடல்தானா என ஆச்சரியப்பட வைத்தவர்கள். இதோ ஒரு நடன அறிமுகம். உடம்பை ரப்பர் மாதிரி வளைத்து, சுழன்று சுழன்று ஆடும் எல்லா வித நடனங்களும் பாஸ் நடனம் - டாஸ்கோ நடனமாகும். ஸ்பானிஷ் ஸ்டைலிலும், ஆப்பிரிக்க ஸ்டைலிலும் கலந்து செய்த கலவையாகும் இந்த டாஸ்கோ டான்ஸ்.ஆனால், இது நிலைப்பெற்றது அர்ஜென்டினா உள்ளிட்ட தென் அமெரிக்க நாடுகளில்தான். ரொம்ப சிக்கலான அசைவுகள் கொண்டது இந்த டான்ஸ் வகை. எளிதாக குறிப்பிட வேண்டுமானால், உடலை அசைத்து முன்னே கொண்டு சென்றுவிட்டு, அப்புறமாக கால்களை அந்த இடத்துக்கு நகர்த்துவதுதான் டாஸ்கோ டான்ஸ். பார்ப்பதற்கு ஜிம்னாஸ்டிக்ஸ் மூவ்மென்ட் மாதிரி இருக்கும். வேகமாக டாஸ்கோ ஆடுபவர்களை பார்த்தால், ஸ்கேட்டிங் செய்பவர்கள் நினைவுக்கு வருவர். இந்த நடனத்தின் பாரம்பரியத்தையும் பெருமையையும் உணர்ந்த யுனஸ்கோ அமைப்பு, இதை ஒரு பண்பாட்டு சின்னமாக அறிவித்துள்ளது.இது ஒருபுறம் இருக்க, கடந்த எட்டு ஆண்டுகளாக உலக டாஸ்கோ நடன போட்டி நடைபெறுகிறது. டாஸ்கோ ஆடினால் நரம்பு நோய்கள் தாக்காது என்பது மருத்துவ கொசுறு செய்தி!கலாம் காலம் ! கேள்வி: லெமூரியா கண்டம் அழிந்ததை போல குமரியும் அழியும் என்று சொல்கிறார்களே? இதை தடுக்க அறிவியல் ரீதியான தீர்வு உண்டா?அன்பு கலாம் பதில்: கிடையாது! சூரியன் 10 பில்லியன் ஆண்டுகள் ஒளிர்ந்து கொண்டிருக்கும். அதனால், அழிவு என்பது கிடையாது என்று சந்திரசேகர் சுப்பிரமணிம் என்ற நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கூறியுள்ளார்.அம்மா ! ப்ளீஸ் செஞ்சு தாங்கம்மா ! இது வாழைப்பூ எள் கறி பண்ணும் நேரம்.தேவையானவை: ஆய்ந்து நறுக்கிய வாழைப்பூ ஒரு கப், வெள்ளை எள் - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 2 டீஸ்பூன், தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், கடுகு - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.செய்முறை: கடாயில் எண்ணெய் காய்ந்ததும் எள், மிளகாய், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பை சேர்த்து சிவக்க வறுத்து கொள்ளவும். அதில் உப்பு சேர்த்து பொடித்து கொள்ளவும். வாழைப்பூவை வேகவைத்து கொள்ளவும். கடாயில் இரண்டு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு தாளித்து, வெந்த வாழைப்பூ, தேங்காய் துருவல் போட்டு வதக்கவும். செய்து வைத்துள்ள எள் பொடியை சேர்த்து கிளறி, மல்லித்தழை, கறிவேப்பிலை தூவி பறிமாறவும்.எறும்புகள் ரவுண்டு கட்டாதிருக்க ! எறும்புகளின் சுறுசுறுப்பு நம்மை மிகவும் கவர்கிறது. அவைகளின் வேலை செய்யும் திறன், சேமிக்கும் குணமும் வியக்க வைக்கிறது. ஆனால், நம் உணவு பொருள்களில் அவைகள் ரவுண்டு கட்டும்போது... சர்க்கரை, வெல்லம் போன்ற இனிப்பு வகைகளை வைக்கும் பாத்திரத்தை சுற்றி, வெள்ளரிக்காய் தோலை நெருக்கமாக போட்டு வைத்தால் எறும்புகள் கிட்டவே கிட்ட நெருங்காது.பாலும், பிரிட்ஜூம் ! தமிழ்நாட்டில் கரன்ட் கட் என்பது மாநில கீதம். தினமும் பால் என்பது வீட்டின் முக்கிய பானம். பிரிட்ஜ் இருந்தும், பல மணி நேர கரன்ட் கட் இருந்தால், எந்த பால்தான் கெடாது. ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி பிரிட்ஜில் எப்போதும் வைத்துவிடுங்கள். கரன்ட் கட்டானாலும் கவலையில்லை. பால் பாக்கெட்டுகளை அந்த ஜில் தண்ணீரில் போட்டு வைத்துவிட்டால், சில மணி நேரம் வரை பால் கெட்டு போகாமல் இருக்கும்.அதேவா - அலும்பு வேண்டாம் ! வேகமாகவும் சமைக்க முடியும். குட்டீஸ்களுக்கும் இதை சாப்பிட பிடிக்கும். ஆனால், இதையே திரும்ப திரும்ப கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடாதுங்க.நூடுல்ஸ்: நூடுல்ஸ் செய்யும்போது மசாலா பவுடருக்கு பதிலாக சமையலுக்கு பயன்படுத்தும் மிளகு, சீரகம் சேர்த்து அரைத்த ரசப்பொடியை தூவினால், சுவை வித்தியாசமாகவும், அருமையாகவும் இருக்கும்.பிரெட்: பிரெட்டில் டோஸ்ட், சாண்ட்விச் மட்டுமே செய்து சாப்பிட்டு அலுத்து விட்டதா? பிரெட் துண்டுகளை முக்கோண வடிவில் வெட்டி, டோஸ்ட் செய்து, தாளித்த தயிரைமேலாக ஊற்றுங்கள். இரண்டே நிமிடத்தில் பிரெட் தயிர் வடை தயார்.இரண்டு ஐடியாக்கள் ! தினமும் கடவுளின் முன் ஸ்லோகம் சொல்லும் பழக்கம் பக்தர்களிடம் உண்டு. முக்கியமாய் பெரியவர்கள், குழந்தைகளை ஸ்லோகம் சொல்லும் பழக்கத்திற்கு பழக்கப்படுத்துவர். தினமும் சொல்லும் ஸ்லோக புத்தகத்தின் முக்கியமான பக்கங்களின் ஓரங்களில் 'செலோ டேப்'பை பார்டர் போல மடித்து ஒட்டிவிட்டால் கிழியாமல் இருக்கும்.வீட்டில் மளிகை பொருட்களின் ! மாதாந்திர சாமான்களுக்கு என வீடுகளில் லிஸ்ட் போடுவர். அப்படி லிஸ்ட் போடும்போது, வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரிடமும் அவர்களுக்கு என்ன என்ன தேவை என்பதை கேட்டறிந்து, அந்த மாதம் வீட்டில் பிறந்தநாள், கல்யாணநாள், பண்டிகை, விருந்தாளி வரவு உண்டா என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். வீட்டில் மளிகை பொருட்களின் இருப்பை செக் செய்துவிட வேண்டும். இதனால், ஒரே முறையில் எல்லா பொருளும் வந்துவிடும். வீண் அலைச்சல்கள், நேர விரயங்கள் இல்லை. அதோடு பணமும் மிச்சமாகும். மன நிம்மதியும் உண்டு.அன்புடன்,அங்குராசு. ***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !