உள்ளூர் செய்திகள்

அதிமேதாவி அங்குராசு!

வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!பணமும், பாதுகாப்பும் பலே... பலே...அமெரிக்க லாரி ஓட்டுனர்கள், கத்தை கத்தையாகப் பணம் சம்பாதிக்கின்றனர். அமெரிக்க பத்திரிகையான, 'போர்ப்ஸ்' 68 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பளம் பெரும் வேலைகளில், லாரி ஓட்டுனர் வேலையை, நாலாவது இடத்தில் வைத்துள்ளது.அமெரிக்காவில் இருக்கும் லாரிகளில், குறைந்த பட்சம், 18 சக்கரங்கள் இருக்கும்; நீள மூக்கு போல அமைந்திருக்கும். இதை, 'அமெரிக்கன் டிரக்...' என்பர். இந்தியாவைப் போல, மூன்று மடங்கு நிலப்பரப்புள்ள அமெரிக்காவின் வர்த்தகத்துக்கு, இது பெரும் உதவி புரிகிறது. இந்த டிரக்குகளில், டிரெய்லரும், கேபினும் இரண்டாக பிரிக்கப்பட்டு இருக்கும். இந்த கேபினில், ஓட்டுனரின் வசதிக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ள சிறிய அறையில், 'டிவி' பிரிட்ஜ், டி.வி.டி., எலெக்ட்ரிக் அடுப்பு, சிறிய பாத்ரூம், பெட்ரூம் என, அனைத்து வசதிகளும் இருக்கும்; சில லாரிகளில், சோலார் பேனலும் பொருத்தப்பட்டு இருக்கும்.அமெரிக்காவில் உள்ள, எல்லா தேசிய நெடுஞ்சாலைகளிலும், 1௬0 கி.மீ., இடைவெளியில், 'டிரக் ஸ்டாப்' என்ற இடம், நிறுவப்பட்டுள்ளது; தனியாரால் நடத்தப்படுகிறது. இது, நுாற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் இருக்கும். இங்கு, உணவு விடுதிகள், அங்காடிகள், இன்டர் நெட் மையம், குளியல் அறைகள், ஓய்வு அறைகள், கேளிக்கை விடுதிகள் என, சகல வசதிகளும் இருக்கும். டிரக்குகளில், நவீன, ஜி.பி.எஸ்., வசதி இருப்பதால், வழியில் உள்ள டிரக் நிறுத்தங்களை முன் கூட்டியே தெரிந்துக் கொள்ள முடியும். அமெரிக்காவின் போக்குவரத்து அமைப்பு, சாலைகளில் செல்லும் டிரக்குகளின் சரக்கு அளவு, எடை போன்றவற்றை அதி நவீனமாக கண்காணிக்கிறது. சாலைகளில், பல இடங்களில் சென்சார் அமைக்கப்பட்டு, டிரக்குகளின் எடை, வேகம், அளவு ஆகியவை, அருகிலுள்ள கண்காணிப்பு நிலையங்களுக்கு தெரியப்படுத்துகின்றன. இதன் மூலம், காவல்துறையினர், விதிமுறைகளை மீறும் டிரக்குகளை மட்டுமே நிறுத்துவர்.இதனால், ஓட்டுனர்களின் நேரம் மற்றும் எரிபொருள் பெரிதும் சேமிக்கப்படுகிறது. மேலும், டிரக்குகள் விபத்தில் சிக்கமால் இருக்க, ஓட்டுனர்களின் கட்டுப்பாட்டை டிரக் இழக்கும் போது, அதை நிறுத்துவதற்கு, 'எமர்ஜென்சி டிரக் ஸ்டாப்ஸ்' என்ற அமைப்பு, தேசிய நெடுஞ்சாலை மற்றும் மலைப் பாதைகளில் இருக்கும்.டிரக்குகளின் வேகத்தை குறைப்பதற்காகவே, சாலைகள், புதை மணலாலும், சிறு கற்களாலும் அமைக்கப்பட்டு இருப்பதால், சாலையில் பயணிக்கும் மற்ற வாகனங்கள் விபத்துக்குள்ளாவது தவிர்க்கப்படுவது மட்டுமல்லாமல், ஓட்டுனர்களும் காப்பாற்றப்படுகின்றனர். டிரக்குகளுக்கான வேகம், கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில், தற்போது, ஓட்டுனர்கள் தேவை அதிகரித்துள்ளது. அடுத்து, சில ஆண்டுகளில், மேலும், 25 முதல் 30 சதவீதம் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால், ஓட்டுனர்கள் வருமானமும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.- என்றென்றும் அன்புடன், அங்குராசு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !