உள்ளூர் செய்திகள்

சீத்தாப்பழம்!

சீத்தாப்பழம் ஆங்கிலத்தில் சுகர் ஆப்பிள் எனப்படுகிறது. இதில் வைட்டமின் - சி, கால்ஷியம் சத்துகள் மிகுதியாக உள்ளன. இது தவிர மா, புரதம், கொழுப்பு, தாது உப்புகள், பாஸ்பரஸ், இரும்புச்சத்துகளும் அடங்கியுள்ளன.அமெரிக்கா, மேற்கிந்தியத்தீவுகளை தாயகமாக உடையது. ஸ்பானிய வாணிகர்களால் ஆசியா கண்டத்துக்கு கொண்டு வரப்பட்டது. சீத்தா மரத்தின் இலை மருத்துவ குணம் உடையது. சீத்தாபழம் சாப்பிட்டால் உடல் வலிமையாகும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். எலும்பு, பற்கள் பலமடையும். ரத்த ஓட்டம் சீராகும். நினைவாற்றல் திறன் அதிகரிக்கும். சீத்தா பழத்தில் குளுக்கோஸ் கணிசமாக உள்ளதால் உடல் சோர்வை அகற்றி சுறுசுறுப்பை ஏற்படுத்தும். - வி.சுரேஷ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !