உள்ளூர் செய்திகள்

பசிபிக் பெருங்கடல்!

உலக வரைப்படத்தை உற்று நோக்கினால் பளிச்சென தெரிவது, பசிபிக் பெருங்கடல். புவி நிலப்பரப்பை விட மிகப் பெரியது. இதற்கு, பசிபிக் என்ற பெயரிட்டவர் போர்ச்சுகீசிய மாலுமி பெர்டினாண்ட். இதன் பொருள் அமைதிக்கடல் என்பதாகும். ஆனால், சுனாமி அதிகம் உருவாவது இந்த கடலில் தான். பசிபிக் கடல் நீளம், 16 ஆயிரம் கி.மீ., அகலம், 11 ஆயிரத்து, 200 கி.மீ., ஆழம், 1765 மீட்டர். இதன் அடிப் பகுதியில், 3,200 கி.மீ., நீளத்திற்கு ஒரு மலைத் தொடர் இருக்கிறது. வட அமெரிக்க கண்ட பகுதியில் உள்ள ஹவாய் தீவுகள், இந்தத் தொடரின் பாதையில் உள்ளன. இது பற்றி, 16ம் நுாற்றாண்டில் தான் உலகம் முழுக்க தெரிய வந்தது.- அ.யாழினிபர்வதம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !