உள்ளூர் செய்திகள்

தங்கம்!

தங்கத்தை விரும்பாதோர் இருக்க முடியாது. இதன் மதிப்பும், விலையும் குறைவதே இல்லை. ஒரு நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு, தங்கக் கையிருப்பு முக்கியமானதாக கருதப்படுகிறது. ஒரு நாட்டின் கடன் தகுதி, பொருளாதார நிலையை நிர்ணயிப்பதில், தங்க கையிருப்பு முக்கிய பங்கு வகிக்கிறது.உலகில், தற்போது வரை 2.44 லட்சம் மெட்ரிக் டன் தங்கம் இருப்பில் உள்ளது. 1 மெட்ரிக் டன் என்பது 1,000 கிலோ. நிலத்தடியில், 5.7 கோடி கிலோ இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. கடல் நீரில் ஏராளமான அளவில் தங்கம் உள்ளது. அதைப் பிரித்தெடுப்பது மிகவும் கடினம். அதிக செலவு பிடிக்கும்.அண்டை நாடான சீனா மற்றும் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்காவில் அதிகமாக தங்கம் கிடைக்கிறது. அமெரிக்க சுரங்கங்களில், 30 லட்சம் கிலோ தங்கம் இருப்பதாக, 2022ல் மதிப்பிடப்பட்டது. சுரங்க இருப்பில், அது முன்னணி நாடுகளில் ஒன்றாக உள்ளது. தங்கத் தேவையை பூர்த்தி செய்ய, நம் நாடும் சுரங்கங்களைக் அமைத்துள்ளது. இதன் வழியாக சிறிய அளவில் மட்டுமே கிடைக்கிறது. தேவைக்கு இறக்குமதியும் செய்யப்படுகிறது. தங்கத்தை பல நாடுகள் அதிகமாக இருப்பு வைத்துள்ளன. அமெரிக்கா, 81.33 லட்சம் கிலோ கையிருப்பில் வைத்துள்ளது. ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி, -33.52 லட்சம் கிலோ, இத்தாலி, 24.51 லட்சம், பிரான்ஸ், 24.36 லட்சம் கிலோ மற்றும் ரஷ்யா, 23.32 லட்சம் கிலோவை இருப்பில் வைத்துள்ளன. - வி.பரணிதா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !