எலுமிச்சை பழம்!
மருத்துவ குணங்கள் நிறைந்தது எலுமிச்சை பழம். இந்த பழச்சாறுடன், சம அளவு தேன் கலந்து குடித்தால், வறட்டு இருமல் குணமாகும். உடல் பொலிவு பெறும். எலுமிச்சை பழச்சாறுடன், புதினா இலைச்சாறு கலந்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வந்தால் நன்கு பசிக்கும்.ஒவ்வொரு நாளும் எலுமிச்சை பழத்தை உணவில் சேர்த்து வந்தால், வாய் துர்நாற்றம் அறவே நீங்கும். எலுமிச்சை பழத்தோலுடன் உப்பு சேர்த்து துலக்கினால், பற்கள் பளிச்சிடும்.- ஆர்.கீதா