வித்தியாசமான பெண்!
ஐரோப்பிய நாடான ஜெர்மனியை சேர்ந்தவர் வெரோனிகா சீடர். இந்த பெண் தான், உலகின் வித்தியாசமான மனிதராக கருதப்படுகிறார். சாதாரண மனிதரின் பார்வை திறனை விட இவருக்கு, 20 மடங்கு கூர்மையானது. இந்த பெண் நிற்கும் இடத்திலிருந்து, நேர் வரிசையில், 1.6 கி.மீ., துாரத்துக்கு அப்பால் இருப்பவரையும் தெளிவாக அடையாளம் காண முடியும்.கொரோனா வைரஸ், சட்டையில் ஒட்டியிருந்தால், சாதாரணமாக பார்த்தே கண்டறிந்து விடுவார்; அவ்வளவு கூரிய பார்வை உடையவர். இதற்காக, 1972ல் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றார். இவர் நவ., 22, 2013ல், 62ம் வயதில் மறைந்தார். இறக்கும் தருவாயிலும் பார்வைத்திறன் குறையவில்லை; இறுதி வரை துல்லியத் தன்மையுடன் இருந்தது.- வ.முருகன்