வீ டூ லவ் சிறுவர்மலர்!
என் வயது, 74; தினமலர் நாளிதழின், 25 ஆண்டு கால வாசகன். என் பேத்தியர் வற்புறுத்தலால் சிறுவர்மலர் இதழை படிக்க துவங்கினேன். இப்போது அதன் ரசிகனாகி விட்டேன்.புள்ளிகளை இணைத்து, படம் வரைவாள் என் பேத்தி. அதற்கு வண்ணம் தீட்டி மகிழ்வது என் வேலை. என் பேத்தி வரைந்த ஓவியங்களை, 'உங்கள் பக்கம்!' பகுதிக்கு தொடர்ந்து அனுப்புகிறேன். இளமைக் கால அனுபவம் நிறைந்த கடிதங்களை, 'ஸ்கூல் கேம்பஸ்!' பகுதியில் படிக்கும் போது, என் சிறு வயது நினைவுகள் கண்முன் தோன்றி மகிழ்ச்சி தருகிறது. வித்தியாசம் மற்றும் அறிவுப்பூர்வமான தகவல்களை, 'அதிமேதாவி அங்குராசு!' பகுதியில் படித்து, அறிவை வளர்க்க முடிகிறது. இம்மாதிரி நற்செயல்கள் செய்து வரும் சிறுவர்மலர் இதழை போற்றி பாராட்டுகிறேன்!- ஆர்.துரை, காஞ்சிபுரம்.தொடர்புக்கு: 80562 68920