உள்ளூர் செய்திகள்

சரியான விடை!

சிவகங்கை மாவட்டம், புழுதிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், 1992ல், 9ம் வகுப்பு படித்த போது, வரலாறு பாட ஆசிரியராக இருந்தார் சொக்கலிங்கம். ஆர்வத்தை துாண்டும் வகையில், பாடம் நடத்துவார்; கனிவுடன் பழகுவார். அன்று முக்கிய பாடம் நடத்தியவர், 'ஹிந்துக்களின் புனித நுால் பெயர் என்ன...' என, புன்னகை மாறாமல் கேட்டார். அனைவரும் அமைதியாக இருந்தனர். யாருக்கும் பதில் தெரியவில்லை.நான், 'தெரியும்' என கையை உயர்தினேன். எழுந்து விடை கூற அனுமதித்தார்.நிதானமுடன், 'பகவத் கீதை...' என்றேன். மிகவும் பாராட்டி, 'இஸ்லாம் சமயத்தை சேர்ந்தவன் சரியான விடை சொல்லியிருக்கிறான். மற்றவர்களுக்கு தெரியவில்லை. கை தட்டி அவனை உற்சாகப்படுத்துங்கள்...' என்றார். மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். தற்போது எனக்கு, 48 வயதாகிறது; தினக்கூலி தொழிலாளியாக பணி செய்கிறேன். வகுப்பறையில், சரியாக விடை சொன்னதற்கு கிடைத்த கை தட்டல் இன்றும், என் காதில் ஒலித்து கொண்டிருக்கிறது.- மு.ராஜா முகமது, சிவகங்கை.தொடர்புக்கு: 88070 66122


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !