உள்ளூர் செய்திகள்

சர்க்கரை வள்ளிக்கிழங்கு போண்டா!

தேவையான பொருட்கள்: சர்க்கரை வள்ளிக்கிழங்கு - 200 கிராம்வேர்க்கடலை மாவு - 50 கிராம் அரிசி மாவு, மிளகாய் துாள், பெருங்காயத் துாள் - சிறிதளவுதண்ணீர், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.செய்முறை:சர்க்கரை வள்ளிக்கிழங்கை சுத்தம் செய்து, தோல் நீக்கி துருவவும். இதனுடன், வேர்க்கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் துாள், பெருங்காய பொடி, உப்பு, தண்ணீர் சேர்த்து பிசையவும்.பிசைந்த மாவை சிறிது, சிறிதாக உருட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். சுவை மிக்க, 'சர்க்கரை வள்ளிக்கிழங்கு போண்டா!' தயார். அனைத்து வயதினரும் விரும்பி உண்பர்!- ஆதிரை வேணுகோபால், சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !