வீ டூ லவ் சிறுவர்மலர்!
என் வயது, 63; மருத்துவம் பற்றிய விழிப்புணர்வு பேச்சாளராக உள்ளேன். சிறுவர்மலர் இதழின், நீண்ட கால வாசகி. வேலை நிமித்தமாக வெளியூர் சென்று விடுவார் கணவர். எனக்கு ஒரே மகள். திருமணம் முடித்து, வெளியூரில் வசிக்கிறார். இதனால், மிகுந்த துயருடன் இருந்தேன். இந்த நிலையில் சிறுவர்மலர் இதழை தந்து, 'இந்த புத்தகத்தை படித்தால் மனம் அமைதி பெறும்...' என்றார் கணவர். அதன்படி வாசித்து வருகிறேன். ஆர்வம் மேலிட புதிர் போட்டியிலும் பங்கு பெற்று வருகிறேன். நல் எண்ணத்தை விதைக்கும், 'ஸ்கூல் கேம்பஸ்!' பகுதிக்கும் கடிதம் எழுதி வருகிறேன். என் மகள் மற்றும் பேரப்பிள்ளைகள் ஆர்வமுடன், சிறுவர்மலர் இதழை படிக்கின்றனர். பேரன் பேத்தியர் புகைப்படங்கள் வருவது கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். சிறுவர்மலர் இதழின் இனிய பணி தொடரட்டும் பல்லாண்டு! கண்ணீர் துடைத்து மகிழ்வித்த மலர் வளரட்டும்!- பா.ஜெயலட்சுமி, விருதுநகர்.தொடர்புக்கு: 99524 12918