உள்ளூர் செய்திகள்

வீ டூ லவ் சிறுவர்மலர்!

என் வயது, 64; தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றேன். சிறுவர்மலர் இதழை, 18 ஆண்டு காலமாக விரும்பி படிக்கிறேன்.மழலைகளின் புகைப்படங்களை, 'குட்டி குட்டி மலர்கள்!' பகுதியில் பார்க்கும் போது, மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. 'மம்மீஸ் ஹெல்த்தி கிச்சன்!' உணவுகள் ஆரோக்கியம் மற்றும் சத்துள்ளவை.ஸ்கூல் கேம்பஸ், அதிமேதாவி அங்குராசு பகுதிகளில் வரும் செய்திகள், அருமையிலும் அருமை; தொடர்கதை, சிறுகதைகளில் கூறப்படும் கருத்துகள், குழந்தைகளுக்கு பயனளிக்கின்றன. சிறுவர்மலர் இதழை படிக்கும் போது இது, பெரியவருக்கா, சிறுவருக்கா என்ற கேள்வி மனதில் தோன்றும். சிறுவர்மலர் இதழ், எல்லாருக்குமானது என்ற விடை தான் எப்போதும் கிடைக்கிறது.- எம்.தமிழ்மாறன், புதுக்கோட்டை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !