துளசி துவையல்!
தேவையான பொருட்கள்:துளசி இலை - 25காய்ந்த மிளகாய் - 4சின்ன வெங்காயம் - 8தேங்காய் துருவல் - 0.5 கப்பூண்டு பல் - 3புளி, கடுகு, உளுந்தம் பருப்பு, நல்லெண்ணெய், பெருங்காயத் துாள் - சிறிதளவுஉப்பு, தண்ணீர் - தேவையான அளவு.செய்முறை:சுத்தம் செய்த துளசி இலை, சின்ன வெங்காயம், பூண்டு பற்களை பொடியாக நறுக்கவும். வாணலியில், நல்லெண்ணெய் சூடானதும், கடுகு, உளுந்தம் பருப்பு, பெருங்காயத் துாள், காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல் போடவும். பின், நறுக்கியவற்றை சேர்த்து, நன்றாக வதக்கி ஆற விட்டு புளி, உப்பு, தண்ணீர் சேர்த்து அரைக்கவும். சுவையும், சத்தும் நிறைந்த, 'துளசி துவையல்!' தயார். பக்க உணவாக பயன்படுத்தலாம். அனைத்து வயதினரும் விரும்பி உண்பர்.- பி.மஹதி, திருச்சி.