வீ டூ லவ் சிறுவர்மலர்!
என் வயது, 58; தனியார் துறையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றேன். சிறுவர்மலர் இதழை சிறுவயதில் இருந்தே படித்து வருகிறேன். தற்போதும் ஆர்வம் குன்றாமல் வாசித்து, கருத்துகளை மனதில் நிறுத்துகிறேன். என் பேர பிள்ளைகள் மற்றும் வீட்டருகே வசிக்கும் குழந்தைகளுக்கு, சிறுவர்மலர் இதழில் வரும் கதை மற்றும் கட்டுரையில் உள்ள செய்திகளை பகிர்ந்து அறிவூட்டுகிறேன். என் ஓய்வு காலம் இதுபோல் பயனுள்ள வகையில் இருப்பது மகிழ்ச்சி தருகிறது. இதற்கு உதவும் சிறுவர்மலர் இதழுக்கு நன்றிகள் பல!- ஜெரி.டி.டார்வி, துாத்துக்குடி.தொடர்புக்கு: 88383 42341