அதிமேதாவி அங்குராசு!
சாப்பிடாமல் இருந்தால்...உடல் வளர்ச்சிக்கு, சத்துகள் நிறைந்த உணவு மிகவும் அவசியம். ஒருநாள் முழுதும் சாப்பிடாமல் இருந்தால், உடலில் என்ன வகை மாறுதல் நடக்கும். இது பற்றிய சுவாரசிய தகவல்களை பார்க்கலாம்...உடல் செயல்பாட்டுக்கு ஆற்றல் தருவது குளுக்கோஸ். உண்ணும் உணவு செரித்தவுடன், தசைகளும், கல்லீரலும், அதிலிருந்து குளுக்கோசை எடுத்து சேமிக்கும். தேவைப்படும் போது, ரத்தம் வழியாக அனுப்பும். உரிய நேரத்தில் சாப்பிடாமல் இருந்தால் இந்த நடைமுறை முற்றிலும் மாறி விடும்.சாப்பிடாமல் இருக்கும் முதல், எட்டு மணி நேரம் சாதாரணமானது. அதுவரை, விரத நிலையை உடல் தாங்கி கொள்ளும். இந்த எட்டு மணி நேரத்தில், கடைசியாக சாப்பிட்ட உணவை வயிறு செரித்துக் கொண்டிருக்கும். ரத்தமும், சீராக வேலையை செய்யும்.பின், உணவு வரவில்லை என்றால், 'குளுக்கோனியோ ஜெனிசிஸ்' என்ற நிலையை உடல் அடையும். கார்போைஹட்ரேட் அல்லாத மூலக்கூறுகளில் இருந்து குளுக்கோசை உற்பத்தி செய்யும் நிலை தான், குளுக்கோனியோ ஜெனிசிஸ் எனப்படும்.இந்த நிலையில் உடலில் வழக்கத்தை விட, அதிக கலோரி சக்தி எரிக்கப்படும். அப்போது, உடலில் இருக்கும் கொழுப்பு உடைய ஆரம்பிக்கும். இப்படி ஒருநாள் செய்யும் போது, பெரிதாக எந்த பாதிப்பும் இருக்காது. நன்மைகள் உண்டாகும்.அதவாது, 24 மணி நேரம் வரை, எதையும் சாப்பிடாமல் இருந்தால் இதயம் சார்ந்த பிரச்னைகள் குறையும். உடலில் சேர்ந்துள்ள நச்சுக்கள் எளிதாக வெளியேறும். செரிமான உறுப்பு மண்டலம் ஆரோக்கியம் அடையும்.ஒருநாள் விரதம்...* மூளையின் திறனை அதிகரிக்கும்* சுறுசுறுப்பாக இருக்க உதவும் * வாயு தொல்லை, குடல் சம்பந்தமான பிரச்னைகள் அகலும்* உடலின் கலோரிகள் எரிந்து, எடை குறையும். ஆரோக்கியமுடன் இருக்க மாதத்திற்கு ஒருமுறை இதுபோல சாப்பிடாமல் இருப்பது பலன் தரும். ஆனால், ஒரு நாளுக்கு மேல் இதை கடை பிடித்தால் நிலைமை மாறும். தசை, சேமித்திருக்கும் புரதங்களிலிருந்து ஆற்றலை எடுக்க துவங்கும். இது, 'ஸ்டார்வேஷன் ஸ்டேஜ்' எனப்படும். ஆபத்தான நிலை.இதற்கு மேலும் சாப்பிடாமல் இருந்தால், இதயம், சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் போன்ற உறுப்புகள் பாதிப்படைய துவங்கும். குடலில் ஸ்டெம் செல்களின் மறு உற்பத்தி குறையும். ஆரோக்கியம், நோய் எதிர்ப்புக்கு இது மிக அவசியம்.பொதுவாக, குடலில் உள்ள சில திசுக்கள், ஐந்து நாட்களுக்கு ஒருமுறை புதுப்பித்துக் கொள்ளும். குடல் செல்கள், கார்போைஹட்ரேட்டுக்கு பதிலாக, கொழுப்பை செரிக்க ஆரம்பிக்கும் போது அதில் பெரும் மாற்றம் நடக்கும்.ஒருநாள் முழுக்க சாப்பிடாமல் இருக்கும் நடைமுறையை எல்லாரும் கடைபிடிக்க முடியாது. முக்கியமாக சர்க்கரை நோயாளிகள், கர்ப்பிணிகள், 18 வயதுக்கும் கீழுள்ளோர், நோய்வாய்ப்பட்டோர் இதை கடைபிடிக்கக் கூடாது.- என்றென்றும் அன்புடன், அங்குராசு.