உள்ளூர் செய்திகள்

அடைக்கலம்!

வேடந்தாங்கல் சரணாலயத்தில், நாரை, கொக்கு, மீன் கொத்தி பறவை, ஆந்தை, கழுகு என, பறவைகள் நிரம்பி இருந்தன. வெளிநாடுகளில் இருந்து வலசையாக வரும் பறவைகள் சில மாதங்கள் தங்கி இளைப்பாறுவது வழக்கம்.இதனால், இடப் பற்றாக்குறையும், ஏரியில் மீன்கள் கிடைப்பதில் பிரச்னையும் ஏற்பட்டது.உள்ளூர் பறவைகளான கொக்கு மற்றும் சிட்டுகள் இதை சிரமமாக உணர்ந்தன. வேற்று நாட்டு பறவைகளுக்கு, இடத்தையும், உணவையும் விட்டு கொடுக்க மனமில்லை.இந்த கோரிக்கையை முன் வைத்து, தலைவர் கழுகை அணுகின உள்ளூர் பறவைகள்.கொக்குகள் முன் வைத்த பிரச்னையை நிதானமாய் பரிசீலித்தது கழுகு.பின், 'நண்பர்களே... உங்கள் வருத்தத்தை உணர்கிறேன். வலசை பறவைகள் வருகையால், இருப்பிடம், உணவுக்கு சிரமப்படுகிறீர். ஆனால், பாவம் வெளிநாட்டில் தட்ப வெப்ப நிலை மாறும் போது, காப்பாற்றி கொள்ள இங்கு வருகின்றன வலசை பறவைகள். நாமும் விரட்டினால் அவை எங்கு போகும்... நமக்கும் இப்படி ஒரு நிலை ஏற்பட்டால் எப்படி இருக்கும். சகோதர பறவைகளின் துயரை சற்று நிதானமாக எண்ணிப்பாருங்கள்...'கழுகின் அறிவுரை கேட்டு சிந்திக்க துவங்கின உள்ளூர் பறவைகள்.'தலைவரே... மன்னியுங்கள். இனி, அடைக்கலம் தேடி வருவோரை இன்முகத்துடன் வரவேற்போம்...'நிறைவுடன் விடை பெற்றன பறவைகள்.கிடைத்த உணவையும், இருக்கும் இடத்தையும் பகிர்ந்து மகிழ்வுடன் வாழ்ந்தன.பட்டூஸ்... அடைக்கலம் தேடுவோரை வரவேற்று உபசரிப்பது நற்குணமாகும்.எம்.பி.தினேஷ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !