வெள்ளரிப் பிஞ்சு பாயசம்!
தேவையான பொருட்கள்:வெள்ளரிப் பிஞ்சு - 1பசும்பால் - 250 மி.லி.,சர்க்கரை - 150 கிராம்அரிசி மாவு - 3 தேக்கரண்டிபாதாம் பவுடர், நெய், ஏலக்காய் பொடி, முந்திரி, தண்ணீர் - தேவையான அளவு.செய்முறை:வாணலி சூடானதும், துருவிய வெள்ளரியை, நெய்யில் வதக்கி, தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். அதில், அரிசி மாவு, பாதாம் பவுடர் கலக்கவும். பின், சர்க்கரை, ஏலக்காய்த்துாள் சேர்த்து, கொதிக்க விடவும். அதனுடன், காய்ச்சி ஆறிய பால், நெய்யில் வறுத்த முந்திரி சேர்க்கவும்.சுவை மிக்க, 'வெள்ளரிப் பிஞ்சு பாயசம்' தயார்! அனைத்து வயதினரும் விரும்பி பருகுவர்.- எஸ்.ராஜம், திருச்சி.