உள்ளூர் செய்திகள்

வீ டூ லவ் சிறுவர்மலர்!

நான், இசை ஆசிரியை. பெற்றோர்களுக்கு பெற்றோராகவும், ஆசிரியருக்கு ஆசிரியராகவும் விளங்கும், சிறுவர்மலர் இதழை விடாது படிக்குமாறு மாணவர்களிடமும், பெற்றோரிடமும், கூறுவேன். பல குடும்பங்களில் இப்பழக்கம் பரவி விட்டது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன்.நீதி, புராண, சரித்திர, டிடெக்டிவ் மற்றும் நகைக்சுவை கதைகள், ஓவியப் படங்கள், சிறியோர், பெரியோர் அனைவரும் தங்கள் திறமைகளை காட்டும் பகுதிகள் என எதைச் சொல்வது, எதை விடுவது என்று தெரியவில்லை. மூட நம்பிக்கைகளை வளர்க்காமல், தன்னம்பிக்கையை பெருக்கும், மனோ தத்துவ டாக்டர், சிறுவர்மலர் இதழ் என்றால் மிகையாகாது.சமுதாயத்தை கெடுப்பது என்று, ஒரு சிறு பகுதி கூட கிடையாது. சிறுவர்மலர் இதழை என்றும் நேசிப்பேன்.- தி.பத்மா, கோயம்புத்துார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !