உள்ளூர் செய்திகள்

சாக்கடை மூடியில் கைவண்ணம்!

ஜப்பானில் சாக்கடை மூடிகளில், விலங்குகள், பூக்கள் மற்றும் அந்தந்த இடத்தை குறிப்பது போன்று கண்கவர் வண்ணத்தில் வடிவமைத்து, சாலைகளில் பொருத்தியுள்ளனர். இதை கலையாகவே கருதி, 'மேன்ஹோல் கவர் ஆர்ட்' என்று பெயர் வைத்து, உலக நாடுகளை, தங்கள் பக்கம் கவர்ந்துள்ளனர். நம் ஊரில், சாலையில் சற்று கவனக்குறைவாக போனால், சாக்கடைக்குள் விழுவோம். ஆனால், ஜப்பானிலோ அழகான வண்ண மயமான சாக்கடை மூடிகளை பார்த்து, ரசித்தவாறு செல்கின்றனர்!— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !