இமேஜ் பற்றி கவலைப்படாத ஜான் ஆப்ரகாம்!
பிரபல நடிகர் ஒருவரால், சுதந்திரமாக வெளியே சுற்றுவது சிரமமான காரியம். ஆனால், சிலர் மட்டும் அதைப் பற்றி அலட்டிக்காமல் தெருக்களில் சுற்றி வருவர். பாலிவுட் நடிகர், ஜான் ஆப்ரகாம், 'இமேஜ்' பற்றி கவலைப்படாமல், தெருக்களில் சுற்றி வர தயக்கம் காட்டுவதே இல்லை. பைக் சவாரியை மிகவும் விரும்பும் இவர், மும்பை தெருக்களில் பைக்கிலேயே சுற்றி வருகிறவர். பைக் பிரியரான நடிகர் ஒருவர் இருக்கிறார் என்று தெரிந்தால், பைக் நிறுவனம் சும்மா இருக்குமா? இத்தாலி பைக் தயாரிப்பு நிறுவனம், தங்கள் தயாரிப்பான, 'அப்ரிலியா ஆர். எஸ்.வி.4' என்ற சூப்பர் வகை பைக்கை, ஜானுக்கு பரிசாக அளித்தது. 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இந்த சூப்பர் பைக்கில் தான், தெருக்களில் பாய்ந்து செல்கிறார் ஜான் ஆப்ரகாம்.— ஜோல்னாபையன்