உள்ளூர் செய்திகள்

அதிர வைத்த ஸ்டேட்மென்ட்!

முன்னாள் உலக அழகி சுஷ்மிதா சென் அடிக்கடி புதுப் புது ஸ்டேட்மென்ட் விடுத்து, பாலிவுட்டை வியக்க வைத்து வருகிறார். 'ஒருத்தருக்கு கழுத்து நீட்டி குடியும், குடித்தனமுமாக இருக்க விரும்பவில்லை...' என்று அறிக்கை விட்டு, முதலில் ஒரு குழந்தையை தத்து எடுத்தார். அந்த குழந்தைக்கு துணை வேண்டும் என்று இரண்டாவது குழந்தையையும் தத்து எடுத்து செய்திகளில் இடம் பெற்றார். ஆனால் தற்போது, 'அடுத்த குழந்தையை எப்ப தத்து எடுக்கப் போறீங்க?' என்று கேட்டவுடன், 'எனக்கு, 38 வயதாகிறது. இனியும் தாமதிக்காம கல்யாணம் செய்துக்கப் போறேன்...' என்று அவர் விடுத்துள்ள ஸ்டேட்மென்ட், அனைவரையும் கதிகலங்க வைத்து விட்டது. — ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !