வைர வியாபாரத்தின் தலைநகர் சூரத்!
இவர்கள் எதையோ உற்று பார்த்துக்கொண்டு இருக்கின்றனர். என்னவென்று தெரிகிறதா... குஜராத் மாநிலம், சூரத்தில் உள்ள மிக பிரபலமான வைர கற்கள் விற்பனை செய்யும் மார்க்கெட்டில் தான் இந்த காட்சி. இவர்கள் வைரங்களின் தரத்தை சோதனை செய்கின்றனர்.உலகின் வைர வியாபார தலைநகர், சூரத் நகர். 18ம் நுாற்றாண்டில் ஆப்ரிக்காவிலிருந்து வந்தவர்கள் தான், இங்கு வைர வியாபாரம் செய்ய துவங்கினர். காலப்போக்கில் குஜராத்தியர், இந்த தொழிலில் அக்கறை காட்டினர். இன்று, உலகில் விற்பனை ஆகும் வைரத்தின், 90 சதவீதமும் சூரத்திலிருந்து தான் அனுப்பப்படுகிறது.— ஜோல்னாபையன்