உள்ளூர் செய்திகள்

மாளவிகா மோகனனை உற்சாகமூட்டும் நடிகர்கள்!

த மிழ் சினிமாவில், விஜய், தனுஷ், விக்ரம் மற்றும் கார்த்தி என, பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டபோதிலும், இன்னமும், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை பட்டியலில் இடம் பிடிக்க முடியாமல் இருக்கிறார், மாளவிகா மோகனன். இதன் காரணமாக, சில நேரங்களில் மனமுடைந்து, சினிமாவை விட்டே விலகிவிடலாமா, என்று, அவர் நினைக்கிறார். இதை அறிந்து, அவருடன் நடித்த, தனுஷ் மற்றும் விக்ரம் போன்றவர்கள், ‘நீ மிகவும் திறமையான நடிகை. ஒரே ஒரு, ‘பிரேக்’ கிடைத்தால் போதும், நிச்சயம், பெரிய நடிகையாகி விடுவாய்...’ என்று அவருக்கு, ‘பாசிட்டிவ் எனர்ஜி’ கொடுத்து, உற்சாகப்படுத்துகின்றனர். ‘சக நடிகர்கள் கொடுக்கும் இந்த நம்பிக்கையால்தான், தோல்விகளைக் கண்டு துவண்டு போகாமல், தமிழ் சினிமாவில் தொடர்ந்து எதிர்நீச்சல் போட்டு வருகிறேன்...’ என, பூரிப்புடன் கூறுகிறார், மாளவிகா மோகனன். —  எலீசா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !