உள்ளூர் செய்திகள்

மூன்று மூன்றாக பிரித்தது ஏன்?

நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் லட்சுமிக்கும், அடுத்த மூன்று நாட்கள் சக்திக்கும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதிக்கும் உரியதாக, தமிழகத்தில் விழா எடுக்கிறோம். இதற்கு காரணம், வாழ்க்கைக்கு தேவை பணம், பிற வசதிகள். இதைப் பெறுவதற்கு லட்சுமியை முதலில் துதிக்கிறோம். பணமிருந்தால் போதுமா? அதைப் பாதுகாப்புடன் வைக்க வேண்டுமே. அதற்குரிய தைரியத்தையும், வழிமுறையையும் வேண்டி, சக்தியாக துர்க்கை, காளி இன்னும் பிற காவல் தெய்வங்களை வணங்குகிறோம். பாதுகாப்புடன் கூடிய செல்வம் மட்டும் போதுமா? அதை என்னென்ன பயனுள்ள காரியங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்பது, தெரிய வேண்டுமே. அதற்கு தான் கல்வி. ஆக, காரண காரியங்களுடன் வகுக்கப்பட்டது, நவராத்திரி பூஜை முறை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !