உள்ளூர் செய்திகள்

பட்டப்படிப்பு முடித்தவருக்கு 14,582 காலியிடங்கள்

மத்திய அரசில் குரூப் 'பி', 'சி' பிரிவு காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை எஸ்.எஸ்.சி., அமைப்பு வெளியிட்டுள்ளது. அசிஸ்டென்ட் செக்சன் ஆபிசர்,உதவி அமலாக்கத்துறை அதிகாரி, எக்சிகியூட்டிவ் அசிஸ்டென்ட், ரிசர்ச் அசிஸ்டென்ட், அக்கவுண்டன்ட்,இளநிலை புள்ளியியல் அதிகாரி உள்ளிட்ட பிரிவுகளில் 14,582 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பட்டப்படிப்புவயது: 'பி' பிரிவுக்கு 18 - 30, 'சி' பிரிவுக்கு 18 - 27தேர்ச்சி முறை: இரண்டு கட்ட எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.தேர்வு மையம்: சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, வேலுார்.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசிநாள்: 4.7.2025விவரங்களுக்கு: ssc.gov.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !