பள்ளிக்கல்வி துறையில் 1996 ஆசிரியர் காலியிடங்கள்
தமிழக அரசு மேல்நிலைப்பள்ளிகளில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) வெளியிட்டுள்ளது. தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு,பொருளாதாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், உடற்கல்வி, உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் பள்ளிக்கல்வி 1699, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை 23, ஆதி திராவிடர் 81, பழங்குடியினர் 31, சென்னை மாநகராட்சி 43, கோவை மாநகராட்சி16, மதுரை மாநகராட்சி 4, மாற்றுத்திறனாளி 12, வனம் 7 உட்பட மொத்தம் 1996 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: முதுநிலை பட்டப்படிப்பு, பி.எட்., வயது: பொதுப்பிரிவு 53, மற்ற பிரிவினர் 58 (1.7.2025ன் படி)தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்புவிண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: ரூ. 600. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 300கடைசிநாள்: 12.8.2025விவரங்களுக்கு: trb.tn.gov.in