விமான நிறுவனத்தில் 396 பணியிடங்கள்
இந்திய விமான நிலைய ஆணையத்தின் (ஏ.ஏ.ஐ.,) கீழ் செயல்படும் கார்கோ லாஜிஸ்டிக்ஸ் & அலைடு சர்வீஸ் நிறுவனத்தில் ஒப்பந்த பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. செக்யூரிட்டி ஸ்கிரீனர் 230, அசிஸ்டென்ட் 166 என மொத்தம் 396 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பிளஸ் 2/ஏதாவதுஒரு பட்டப்படிப்பு.வயது: 18-27 (1.6.2025ன் படி)தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு.பணிக்காலம்: மூன்றாண்டுபணியிடம்: சென்னை, பாட்னா, விஜயவாடா, வதோதரா, போர்ட் பிளேர், கோவாவிண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: செக்யூரிட்டி ஸ்கிரீனர் ரூ. 750, மற்ற பணிக்கு ரூ. 500. பெண்கள் /எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 100கடைசிநாள்: 30.6.2025விவரங்களுக்கு: aaiclas.aero